41. புகழ்ச்சோழ நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 41
இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவி : காந்திமதி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சிவ தீர்த்தம்
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : உறையூர்
முக்தி தலம் : கரூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - கிருத்திகை
வரலாறு : சோழர் குலத்தில் அவதரித்தவர். சிவபக்தி மிக்கவர். பல மன்னர்களை வென்றவர். தமக்குத் திறை செலுத்தாதவர்கள் மீது படை எடுத்து அவர்களை வென்று வருபவர். அவ்வாறு ஒரு நாட்டின் மீது படை எடுத்து வென்று வந்தபோது அவர் படைகள் பகைவர்களின் தலகளைக் கொணர்ந்தனர். அதில் ஒரு தலை சடைமுடி தரித்திருந்ததைக் கண்ட நாயனார் ஒரு சிவனடியாருக்குத் தீங்கிழைத்துவிட்டோம் எனச் சொல்லி அத்தலையுடன் தீ வளர்த்து அதில் உயிர் துற்ந்தார். சிவபதம் அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி– 620003 திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 0431-2768546

இருப்பிட வரைபடம்


கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடிதாங்கிக் குலவும்எரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் திருநாமத் தஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி யுள்புக்கார்.
- பெ.பு. 3985
பாடல் கேளுங்கள்
 கண்டசடை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க